வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் விட்ட மு.க.அழகிரி மகள்

வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த கயல்விழி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் விட்ட மு.க.அழகிரி மகள்
Published on

சென்னை,

அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில்

அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சகோதரர் அழகிரி, தி.மு.க.,வில் தென்மண்டல அமைப்பு செயலராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சி பணிகளில் இருந்து, அவர் ஒதுங்கி இருக்கிறார்.

சமீபத்திய சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து, த.வெ.க., ஆட்சி அமைந்துள்ளது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு, அழகிரியின் மகள் கயல்விழி, ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் விஜயை, கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தநிலையில் கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. எஸ்.பி.ஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் லிப்ட் செயல்படாததாதால் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அப்போது

கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு ஆசுவாசுமாக கேட்டிருந்ததால் நான் பேசும் போது கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாயா என கூறி ஆவேசமாக கன்னத்தில் பளார் என்று விட்டார். உடன் கயல்விழியுடன் இருந்தவர் எழுந்து அவரை சமாதானம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் கன்னத்தில் பளார் என அறைந்த கயல்விழி மீது காவல் நிலையத்தில்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com