

சென்னை
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில்,வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் சட்டப் சபையில் அறிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன்,ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.