மார்ச் 31ல் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக கலைஞர் ஊரான திருவாரூரில் பரப்புரையை தொடங்குகிறார்.
மார்ச் 31ல் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்!
Published on

சென்னை,

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

இந்த தொடர் பிரசாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்குகிறார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஊரான திருவாரூரில் பரப்புரையை தொடங்குகிறார்.

குறிப்பு: கழகத் தலைவர் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாமென கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com