தோல்வி பயத்தை மறைக்க அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பும் மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்

இந்தத் தேர்தலில் உங்களை வீட்டிற்கு அனுப்பத் தமிழக மக்கள் தயாராகவுள்ளனர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தோல்வி பயத்தை மறைக்க  அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பும் மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தேர்தல் காலத்தில் மட்டும் எட்டிப்பார்க்கும் தங்களைப்போல அல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி வருவதோடு, ஒவ்வொரு முறையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்தின் வளர்ச்சிக்காக நல்கி வருபவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி! அதுமட்டுமல்லாது, தமிழின் பெருமையையும் தமிழ்நாட்டின் அருமையையும் நன்கு உணர்ந்து, உலகெங்கிலும் தமிழ் மண்ணின் புகழைப் பரப்பி வருபவர் நமது பிரதமர்.

இந்நிலையில், அவர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் என எந்தவொரு அடிப்படையுமின்றி புரளியைக் கிளப்புவது தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல! திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி மக்களை நம்ப வைக்கும் கோயபல்ஸ் தத்துவத்தைக் கையிலெடுத்து மக்களை முட்டாளாக்க நினைக்கும் உங்கள் எண்ணம் இனியும் செல்லுபடியாகாது! இந்தத் தேர்தலில் உங்களை வீட்டிற்கு அனுப்பத் தமிழக மக்கள் தயாராகவுள்ளனர்.

தேர்தல் நெருங்கிவிட்டதைக் கருத்தில் கொண்டாவது, தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்து, சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கையும், மக்கள் மனதையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! திசைதிருப்பு நடவடிக்கையை விடுத்து தோல்விக்குத் தயாராகுங்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com