

சென்னை,
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தார். சென்னையில் அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதுபற்றி அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். கல்வி, சுகாதாரம் மற்றும் மகளிர் அதிகாரம் ஆகிய துறைகள் குறித்து நாங்கள் ஒரு பொதுவான தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளோம்.
நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில், அவரது அர்ப்பணிப்புமிக்க நல்லாட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.