அமைச்சராக பொறுப்பேற்ற வன்னி அரசு, ஷாஜஹானுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தவெக அமைச்சரவையில் விசிகவும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் இணைந்துள்ளது.
அமைச்சராக பொறுப்பேற்ற வன்னி அரசு, ஷாஜஹானுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

தமிழக முதல் அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசும் ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானும் இணைந்துள்ளனர். இதில், வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் அடங்கும். ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரானார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும்.

திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்த இரண்டு கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இணைந்துள்ள நிலையில், திமுக தலைவ்ர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசுக்கும் ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள். தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.

பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்”என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com