திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின்!
Published on

சென்னை,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது.

'அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்! அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு -திருவள்ளுவர்

சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள். இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.

தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக!'

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com