

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவிலான 1,217 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 294 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 3,12,082 பயனாளிகளுக்கு 858 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சுசீந்திரம், மண்டைக்காடு, விலவூர், உண்ணாமலைக்கடை, திருவிதாங்கோடு, கடையால், அருமணை மற்றும் ஆற்றூர் ஆகிய பேரூராட்சிகளில் 140 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், குழித்துறை நகராட்சி – மார்த்தாண்டத்தில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன தினசரி சந்தை, கிள்ளியூர் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சிகளில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையங்கள், பத்மாபுரம் நகராட்சியில் 6 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், நாகர்கோவில் மாநகராட்சியில் சர்.சி.வி.ராமசாமி பூங்காவில் 3 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் அறிவியல் பூங்கா;
கோதநல்லூர் பேரூராட்சியில் 73 லட்சம் ரூபாய் செலவில் தினசரி சந்தை, அஞ்சுகிராமம் மற்றும் திங்கள் நகர் பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், வேம்பனூர் தேரூர் குளத்தில் 1 கோடி ரூபாய் செலவில் பறவைகள் சரணாலயம் மற்றும் அபிவிருத்திப் பணிகள், 1 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட தெங்கம்புதூர் பால்குளம் மற்றும் ஆளூர் சமஞ்சான்குளம், நாகர்கோவில் மாநகராட்சியில் 85 லட்சம் ரூபாய் செலவில் உலர் குப்பைகள் பலவகையாக தரம் பிரிக்கும் மறுசுழற்சி மையம், குளச்சல் நகராட்சியில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், 11 லட்சம் ரூபாய் செலவில் உரக்கிடங்கில் அமைக்கப்பட்ட கூரை மற்றும் 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான குழாய்கள், குளச்சல் நகராட்சியில் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் சிறுபாலம், கொல்லங்கோடு நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 6 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள், பத்மநாபபுரம் நகராட்சி மருந்துகோட்டை உரக்கிடங்கு வளாகத்தில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 20 கே.எல்.டி. கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நகராட்சிகளில் 4 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள்;
பொன்மனை பேரூராட்சியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூங்கா, ஆரல்வாய்மொழி, அழகியபாண்டிபுரம், தாழக்குடி மற்றும் பூதப்பாண்டி ஆகிய பேரூராட்சிகளில் 60 லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கொட்டாரம் மற்றும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிகளில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சுகாதார மையக் கட்டடங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பேரூராட்சிப் பகுதிகளில் 112 கோடியே 19 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் 348 இடங்களில் மேம்படுத்தப்பட்ட தார்சாலைப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள்;
மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 77 கோடி ரூபாய் செலவில் பிரதான அலைதடுப்புச் சுவர், கீழக்கடியப்பட்டணம் மீன் இறங்குதளத்தில் 35 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தூண்டில் வளைவு, இரையுமன்துறையில் 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் தூண்டில் வளைவு, 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் காலநிலைக்கு ஏற்றவாறு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் வளப்படுத்தப்பட்ட ஆரோக்கியபுரம் கடலோர மீனவர் கிராமம்;
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நீரோடி – இரயுமன்துறை சாலையில் 35 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள T வடிவ Groynes மற்றும் 10 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாந்தபுரம் சாலை, கோட்டார் - தர்மபுரம் சாலை, அஞ்சுகிராமம் சாலைகள், இடை வழி தடத்திலிருந்து இரு வழித் தடமாக உறுதிப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்ட நாகர்கோவில் கடற்கரை சாலை, ஒரு வழி தடத்திலிருந்து இடை வழி தடமாக மாற்றி உறுதிபடுத்தப்பட்ட புதிய வீராணமங்களம் சாலை, வெள்ளமடம் -சுசீந்திரம் சாலையில் மேம்படுத்தப்பட்ட ஓடுதளம், ஒரு வழி தடத்திலிருநுது இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டு சிறுபாலம் கட்டப்பட்டுள்ள ஈத்தாமொழி சந்திப்பு - பெரியகாட்டுத்துறை சாலை, குளச்சல் -திருவட்டார் சாலையில் மேம்படுத்தப்பட்ட ஓடுதளம், ஆரல்வாய்மொழி -நெடுமங்காடு சாலையில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், மேம்படுத்தப்பட்ட தேனாம்பாறை சாலை;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 66 கோடியே 52 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், சிறப்பு உதவி திட்டம், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம், நம்ம ஊரு நம்ம அரசு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் கீழ் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், சாலைப் பணிகள், தெருவிளக்குகள், சமுதாய நலக்கூடங்கள், சிமெண்ட் சாலைகள், பொது நூலகங்கள், எரிவாயு தகனமேடைகள், அங்கன்வாடி மையங்கள், உணவு தானிய கிடங்குகள், மரக்கன்றுகள், சிறு பாசன குளங்கள் புனரமைப்பு, பள்ளிக் கட்டடங்கள், பொது விநியோகக் கட்டடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளிகளில் சத்துணவு சமையலறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட 595 முடிவுற்றப் பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் கன்னியாகுமரி மற்றும் பேச்சிப்பாறையில் 50 லட்சம் ரூபாய் செலவில் மதி அனுபவ அங்காடிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் மற்றும் 7 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. கருவி, கிருஷ்ணன்கோவிலில் 2 கோடி ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம், நாகர்காவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 2 கோடி ரூபாய் செலவில் ஆயுர்வேத மருந்தகக் கட்டடம், பத்மனபாபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் மற்றும் மருத்துவக் கட்டடம், குழித்துறை அரசு மருத்துவமனையில் 30 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ரத்த வங்கி, கணபதிபுரம், கொட்டாரம், முட்டம், மாங்குழி, களியக்காவிளை, மணலிக்கரை, கொற்றிக்காடு, கோதநல்லூர் (கிழக்கு), மாறான்கோணம், குட்டக்குழி, கடையால், வடிவீஸ்வரம், அச்சன்குளம், சுசீந்தரம், கோதநல்லூர், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய இடங்களில் 8 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பொது சுகாதார அலகுகள்;
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில், நாகர்கோவில் மாநகராட்சியில் 3 கோடியே 33 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட சுற்றுச் சூழல் அலுவலகக் கட்டடம்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், தோவாளை மலர் வணிக வளாகத்தில் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் உயர்மட்ட மேற்கூரை, பறக்கையில் 38 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உலர் களத்துடன் கூடிய தரம் பிரப்பு கூடம், திருப்பதிசாரம் அரசு விதைப் பண்ணையில் 81 லட்சம் ரூபாய் செலவில் 250 மெ.டன். கொள்ளளவு கொண்ட நெல் விதை சேமிப்புக் கிடங்கு மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகன நிறுத்துமிடம் மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில், ஆரல்வாய்மொழி தெற்கு கிராமத்தில் 44 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, கம்பிவலை தடுப்பணை மற்றும் தும்பகோடு ஓடைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு சுவர்;
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், இருளப்பபுரத்தில் 5 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கட்டடம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடையல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிவறைகள், புலியூர்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 94 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைக் கட்டடங்கள்;
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம், தக்கலை, அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், திருவட்டார், கிள்ளியூர், மார்த்தாண்டம், வெண்கஞ்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 41 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பூட்டேற்றி, குமாரபுரம், தோப்பூர், குறத்தியறை, அரசன்குழி 74 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 80 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பத்துக்காணி அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவியர் விடுதிக்கு கேலரி, தடுப்புச்சுவர் மற்றும் சாய்வுதளம், பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக கட்டடம், பேவர் பிளாக் அணுகு சாலை மற்றும் உணவருந்தும் கூடம் மற்றும் ஆசிரியர்/காப்பாளர் குடியிருப்பு கட்டடம், அருமநல்லூர் ஊராட்சியில் கிணற்றுடன் குடிநீர் வசதிகள்;
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், பத்மநாபபுரத்தில் 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கம்;
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 72 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வருவாய்த் துறை கட்டடங்கள்;
வனத் துறை சார்பில், களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட சான்டல் எஸ்டேட் பகுதியில் 14 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் ஆனைநிறுத்தி வேட்டை தடுப்பு முகாம் பகுதியில் 3 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு பாலம்;
வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில், முஞ்சிறையில் 1 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம்;
என மொத்தம், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், வடசேரியில் 69 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து முனையம், நாகர்கோவில் மாநகராட்சியில் 34 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்;
நாகர்கோவில் மாநகராட்சியில், செம்மாங்குளத்தை 6 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அபிவிருத்திப் பணிகள், மாநகராட்சி அலுவலகக் கட்டட வளாகத்தில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைத்து அழகுபடுத்தும் பணிகள், குளச்சல், கொல்லங்கோடு மற்றும் கன்னியாகுமரி நகராட்சிகளில் பல்வேறு பகுதிகளில் 8 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள், சமத்துவபுரத்தில் 48 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தினசரி சந்தை, கன்னியாகுமரி நகராட்சியில் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச் சுவர்;
திருவள்ளுவர் சாலையில் 22 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பிடக் கட்டடம் மற்றும் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் 29 பேரூராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 33 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 106 இடங்களில் மண்சாலைகளை தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள், நெய்யூர் பேரூராட்சியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப் பணிகள், ரீத்தாபுரம் பேரூராட்சியில் 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கிள்ளியூர் பேரூராட்சியில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கும் பணிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 பயனாளிகளுக்கு புதிய வீடுகள், முரங்கவிளை மற்றும் நெட்டாங்கோடு ஆகிய இடங்களில் 49 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள்;
லீபுரம் வாரியுர் அள்ளம் சாலை, பத்திரகாளியம்மன்கோவில் முதல் தாமரைகுட்டிவிளை சாலை, பாம்பன்விளை பருத்திவிளை சாலை, கொடுப்பைகுழி செங்கசுளை சாலை முதல் எம்ஜிஆர் காலனி சாலை, தக்கலை தடிக்காரன்கோணம் சாலை முதல் கொடுஞ்சுனை சாலை, கோர்வைகுழி சாலை,,கொடியார் முதல் கொடுத்ததுறை மலை சாலை, குட்டிபாரவிளை மணலிக்காட்டுவிளை முதல் பெருங்குளம் சாலை, மணவிளாகம் முதல் தச்சகோடு கொரட்டுர்குளம் வாளபள்ளி சாலை, வட்டவிளை சுண்டவிளை சாலை, குன்னத்தூர் மாடன்விளை சானல் முக்கு சாலை, வெள்ளையம்பலம் பாலோடு தெற்குகரை ஐரேணிபுரம் சாலை, பாறைகுளம் தேங்காய்பாறை சாலை ஆகிய இடங்களில் 7 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள்;
தகவல் தொழில் நுட்பம் மற்று டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், அகஸ்தீஸ்வரம் – நாகர்கோவில் தெற்கு கிராமத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், நாகர்கோவில் மாநகராட்சி - கிருஷ்ணன்கோவில் பகுதியில் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திற்கு 7 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் கீழ்குளம் அரசு ஆரம்ப பள்ளிகளில் 4 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 5 கோடியே 77 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1000 மெ.டன். கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு மற்றும் மேல்புறத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கும் பணிகள், தோவாளை அரசு விதைப்பண்ணை திருப்பதிசாரம் வளாகத்தில் 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிழல் வலையுடன் கூடிய உலர் களம் அமைத்தல்;
நீர்வளத் துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 15 நீர்நிலைகளை ஒருங்கிணைந்த நீர்வள வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளுதல்;
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், வில்லுக்குறி - இராஜாக்கமங்கலம் சாலை, இரவிபுதூர்கடை கருங்கல் சாலை, அருமனை - பனச்சமூடு சாலை, பாலமோர் சாலை, ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் - இராஜாக்கமங்கலம் சாலை, கேரளபுரம் - குழிக்கோடு சாலை, மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை சாலை, பனச்சமூடு - வெள்ளச்சிபாறை - அரகநாடு சாலை, அருமனை - மஞ்சாலுமூடு சாலை, கன்னியாகுமரி – பழைய உச்சக்கடை சாலை, அழகியமண்டபம் சந்திப்பு, மங்காடு சாலை ஆகிய இடங்களில் 37 கோடியே 90 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வழி தடத்திலிருந்து இடை வழி தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள், சிறு பாலம், இடை வழிதடத்திலிருந்து இரு வழிதடமாக அகலப்படுத்தும் பணிகள், ஓடுதளத்தினை மேம்படுத்தும் பணிகள், புதிய சாலைகள் அமைக்கும் பணிகள்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், திருவட்டார் வட்டம் - சேனங்கோடு - கிள்ளிக்கோணம் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதியில் 24 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் இணைப்புச் சாலைகள் புனரமைப்புப் பணிகள்;
என மொத்தம், 294 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 40,086 பயனாளிகளுக்கு சிறப்பு வீட்டுமனை பட்டாக்கள், நத்தம் வீட்டுமனை பட்டாக்கள், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட ஆறு வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மறு நில அளவைப் பணிகள் மேற்கொண்டு நிலவரி பட்டாக்கள், நத்தம் பட்டாக்கள், சுனாமி குடியிருப்பு பட்டாக்கள், சிங்காரவேலர் குடியிருப்பு பட்டாக்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பட்டா மாற்றம்;
7,520 பயனாளிகளுக்கு தேசிய இந்திரா காந்தி முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவரால்
கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர்களுக்கு உதவித்தொகை, முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 2,638 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தனிநபர் வீடுகள், முதல்-அமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகள், பாரத பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் வீடுகள், சுனாமி வீடுகள் பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் வீடுகள் பழுதுபார்ப்பு;
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 9 பேரூராட்சிகளில் 33,653 குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகள்;
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 463 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, திறன்பேசி, காதொலி கருவி, சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம்;
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 47,317 பயனாளிகளுக்கு பயிர்க் கடன், விவசாய நகை கடன், கால்நடை பராமரிப்பு கடன், மீன் வளர்ப்புக்கான கடன், பண்ணை சார்ந்த மத்திய கால கடன், பண்ணை சாராக் கடன், வீட்டுக் கடன், வீட்டு அடமான கடன், சுய உதவி குழுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், ஆதரவற்ற விதவை மகளிர் கடன், பணிபுரியும் மகளிர் கடன், சிறு வணிக கடன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன், டாம்கோ கடன், தாட்கோ கடன், டாப் - செட்கோ கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கக் கடன், புதிய குடும்ப அட்டைகள்;
தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் சார்பில், 1,25,637 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் இணைப்பு, அடையாள அட்டைகள், நலிவுநிலை குறைப்பு நிதி, சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி, தாயுமானவர் திட்டத்தின் கீழ் உதவிகள், மதி சிறு தானிய உணவகம், சத்துமாவு உற்பத்தி அலகு அமைப்பதற்கான கடன், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை தொகுப்பு நிதி, சமுதாய தொழில் கடன்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 201 பயனாளிகளுக்கு வன உரிமை பட்டா, இலவச தையல் இயந்திரம், இலவச கணினி பட்டா;
தாட்கோ சார்பில், 3,857 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் மானிய கடன், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் கடன், கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள்;
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 341 பயனாளிகளுக்கு சிறுபான்மையினருக்கான விலையில்லா தையல் இயந்திரம், பிற்படுத்தப்பட்டோருக்கான விலையில்லா தையல் இயந்திரம், முஸ்லிம் மகளிர்களுக்கு கடனுதவிகள், கிறிஸ்தவ உபதேசியார்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள்;
தமிழ்நாடு தொழில் வணிக துறை சார்பில், 8 வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் கடனுதவிகள்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 477 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நலவாரிய அட்டைகள்;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 25 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் உழவர் நலசேவை மையம், முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இடுபொருள் தயாரித்தல் மையம், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் உதவிகள், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்;
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 33,149 பயனாளிகளுக்கு சுழல் நிதி, மீன்பிடி குறைவு கால நிவாரண திட்டம், மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் கடனுதவிகள், கணவாய் மீன் பிடி உபகரணங்கள், தமிழ்நாடு மீனவர் நல வாரிய அடையாள அட்டைகள், இயற்கை மரணம் அடைந்த மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம், குளிர்காப்பிடப்பட்ட வாகனம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடனுதவிகள்;
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை துறை சார்பில், 383 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம், திருமண உதவித்தொகை, அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 300 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள்;
தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை சார்பில், 15,000 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், இயற்கை மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 1,027 பயனாளிகளுக்கு கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் உதவித் தொகை;
என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 858 கோடியே 92 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 3,12,082 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் வழங்கினார்.
நேற்றையதினம் (24.2.2026) தமிழ்நாடு முதல்-அமைச்சர் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரத்தில் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகள், முகாம் வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். அழகுமீனா, மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹெலன்டேவிட்சன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆஸ்டின், புஷ்பலீலா, மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.