இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் - ஓபிஎஸ் புகழாரம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலரட்டும், ஸ்டாலின் வெற்றி பெறட்டும் என ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்தி உள்ளார்.
இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் - ஓபிஎஸ் புகழாரம்
Published on

மதுரை,

மதுரையில் தாய்க்கழகம் திரும்பும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தாய்க்கழகமான திமுகவில் தாயுள்ளத்தோடு இணைத்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கொள்கைக்கு நேர்மையாக, மனசாட்சியுடன் பணியாற்றினேன். கட்சி நலனை கருத்தில் கொண்டு என் கடமையை ஆற்றி வந்தேன்.

ஜெயலலிதா கொடுத்த அரவணைப்பை முதல்-அமைச்சர் எனக்கு கொடுத்தார். வாழ்நாள் முழுவதும் அதிமுக தோல்வியை சந்திக்க போகிறது. என் சொந்த லாபத்திற்காக இதுவரை பணியாற்றியது இல்லை. அண்ணா கண்ட திமுகவில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். தாய் கழகத்தில் இணைந்ததை பெருமையாக கூறி கொள்கிறேன். இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார்.திராவிடம், சமூகநீதி கொள்கைகளை 75 ஆண்டுகளாக பின்பற்றும் ஒரே கட்சி திமுகதான்.

தொண்டர்களை தலைமையை முடிவு செய்ய வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் விதி அதிமுகவில் மீறப்பட்டது. 50 ஆண்டு அரசியல் வாழ்வில் விசுவாசமாக இருந்தேன். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது அபகரிப்பு திமுகவாக மாறியுள்ளது. அண்ணா தந்த சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

தொடர் தோல்விகள் தானே தொடர்கதையாக அங்கே இருக்கிற சுயநலம் பிடித்த அகம்பாவம் பிடித்தவர்களுக்கு அங்கே இருக்கிறது. இனியும் அவர்களின் தோல்வி அங்கே தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 8 தோல்வி, 10 தோல்வி..இனி அவர்கள் வாழ்நாள் எல்லாம் தோல்வியை தான் காணப்போகிறார்கள். இனியும் அதில் பயணிப்பது தன்மானத்திற்கு கேடானது.

இந்த 5 ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், மாதம்தோறும் உதவித்தொகை, வேலைவாய்ப்புகள் மூலம் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com