தினந்தோறும் போலி குற்றச்சாட்டை முன்வைக்கும் மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்

பிரதமர் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் போலி குற்றச்சாட்டை முன்வைக்கும் மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழக மக்களைத் திசைதிருப்ப தினந்தோறும் போலிக் குற்றச்சாட்டை முன்வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தங்களது திறனற்ற திமுக அரசின் சாதனைகளைப் பற்றிப் பேச எதுவும் இல்லை என்பதைவிட தாங்கள் பேசுவதைக் கேட்க கூட மக்கள் கூட்டமில்லை என்ற காரணத்திற்காக வாய்க்கு வந்தபடி பாரதப் பிரதமர் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுவரை எத்தனை முறை தமிழகத்திற்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் நல்கியிருக்கிறார் என்பதையும், புலம்பெயர் தொழிலாளர்களை எத்தனை முறை திமுக தலைவர்கள் ஏளனமாகப் பேசியிருக்கின்றனர் என்பதையும் உலகறியும்! எனவே, தேவையற்ற பொய்களை அடுக்குவதை விடுத்து, தேர்தலில் தோல்வி அடையப்போகும் நாளை எதிர்நோக்கிக் காத்திருங்கள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com