ஸ்மார்ட் சிட்டி திட்டம்: மதுரை, தஞ்சை, நெல்லை பஸ்நிலையம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை பஸ் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்: மதுரை, தஞ்சை, நெல்லை பஸ்நிலையம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

தமிழகத்தில் பல பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த திட்டத்தின் மூலம் நெல்லை, மதுரை, தஞ்சாவூர் பஸ்நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்த புதுபிக்கும் பணி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் புதுப்பிக்கப்பட்ட மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை பஸ் நிலையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதனுடன் நகராட்சி நிர்வாக துறை, தமிழ் வளர்ச்சித்துறை, மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்று உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com