முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on: 

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் ஆண் டுதோறும் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா, குரு பூஜை விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழா வாக தொடங்கியது. நேற்று முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் விழாவாக நடந்தது.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அமைச்சர்கள் ராஜீவ், மதன்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்துகின்றனர்.

தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள். அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளும் மரியாதை செலுத்துகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள். சமுதாய தலைவர்கள் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவரின், 119-வது ஜெயந்தி மற்றும் 64-ம் ஆண்டு குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவையொட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

X