

சென்னை,
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்த தொடர் பிரசாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், மூன்றாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 6-ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் மூன்றாம் கட்டமாக புதுச்சேரியில் பரப்புரையை தொடங்குகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.