மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் - துரைமுருகன்

மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்,

திருத்தணியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, வெள்ளி வேல் ஒன்றை திமுகவினர் பரிசாக அளித்தனர். வெள்ளி வேலை கையில் வைத்தபடி மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதனைத்தொடர்ந்து தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் எல்.முருகன், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான். இப்போதாவது தனித்து பிரச்சாரம் செய்வதாக முடிவெடுத்ததற்காக, காங்கிரசுக்கு பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com