உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

மராட்டியத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.

ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com