சென்னை கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

கடந்தாண்டு சட்ட விதி எண் 110ன் கீழ் ரூ. 85 லட்சத்தில் கார்ல் மார்க்ஸ்சுக்கு சிலை அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூர் கன்னிமாரா பொது நூலகம், அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Also Read
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
சென்னை கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அப்போது கார்ல் மார்க்ஸ் பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கார்ல் மார்க்ஸ் சிலைக்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மத்தியில் ‘கார்ல் மார்க்ஸ்சுக்கு வீரவணக்கம்’ என்று முழக்கமிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com