லாலு பிரசாத் யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

லாலு பிரசாத் யாதவுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "ராஷ்டிரிய ஜனதா தள தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதிக்காக நீங்கள் தொடர்ந்து எடுத்துரைக்கும் நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமாகத் திகழ்கிறது. உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com