

சென்னை,
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (வயது 70) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். கொரேனா பாதிக்கப்பட்டுள்ள வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் மரணம் அடைந்தார்.
இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிந்தார். காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமாருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை பொய்த்தது. கொரோனா அநியாயமாக பிரித்து சென்று விட்டது.
பழகுவதற்கு இனிமையானவர், கடின உழைப்பு, சலியாத முயற்சியால் சாதித்து காட்டியவர். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை கடின உழைப்பால் உருவாக்கி முன்னுதாரணமாக விளங்கியவர்.
கன்னியாகுமாரி எம்.பி., ஆக நாங்குநேரி எம்.எல்.ஏவாக மக்கள் எளிதில் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தவர். அவருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்குமான பாசப்பிணைப்பை நேரில் கண்டு வியந்திருக்கிறேன். அனைத்துக்கட்சி தொண்டர்களுக்கான பாசப்பிணைப்பை நேரில் கண்டு வியந்திருக்கிறேன். அனைத்து கட்சி தொண்டர்களின் அன்பையும் பெற்றவராக திகழ்ந்தார்.
பொது வாழ்விற்கு இலக்கணமாகவும் எடுத்துகாட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. வசந்தகுமார் குடும்பதாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.