மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தமிழக முதல்-அமைச்சராக வருவார்: ஓ.பன்னீர்செல்வம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தமிழக முதல்-அமைச்சராக வருவார்: ஓ.பன்னீர்செல்வம்
Published on

தேனி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தனது வாக்கை பதிவு செய்வதற் காக பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள செவன்த்டே பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேற்று வந்தார். அங்கு அவர் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குப்பதிவு செய்து விட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர்.

அப்போது அவர், ”தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தமிழக முதல்-அமைச்சராக வருவார். நடிகரும், த.வெ.க. தலைவரு மான விஜய் தாக்கத்தை எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது வருகிற 4-ந்தேதி தான் தெரியும். அவர் எவ்வளவு சதவீதம் வாக்குகள் வாங்குகிறார் என்பதை வைத்து அவரது எதிர்காலம் இருக்கும். ஆனால், உறுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com