எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமுல் கந்தசாமி இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 21-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. பெதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய விதி உள்ளது.

ஆனால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாத காலமே இருப்பதால், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனவே, அதுவரை எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாகவே வால்பாறை இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com