

சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனையும், ஜனநாயகத்தின் மாண்பையும் முன்னிறுத்தி, சட்ட விதிகள் தொடர்பான இந்த முக்கியமான பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.