மயில்பாறை முருகன் கோவிலில் வசதிகள் ஏற்படுத்த எம்.எல்.ஏ. ஆய்வு

மயில்பாறை முருகன் கோவிலில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த எம்.எல்.ஏ.நேரில் ஆய்வு செய்தார்.
மயில்பாறை முருகன் கோவிலில் வசதிகள் ஏற்படுத்த எம்.எல்.ஏ. ஆய்வு
Published on

ஜோலார்பேட்டை

மயில்பாறை முருகன் கோவிலில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த எம்.எல்.ஏ.நேரில் ஆய்வு செய்தார்.

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி ஊராட்சி பகுதியில் உள்ள மயில் பாறை முருகன் கோவிலில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர்.

இங்கு பக்தர்களுக்காக குளியலறையும், கழிவறை கட்டிடமும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி, மயில் பாறை முருகன் கோவில் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு குளியலறை மற்றும் கழிவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து நேரில் பார்வையிட்டார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரிசெய்ய துறை அதிகாரிகளை கட்டுக்கொண்டார். இதனையடுத்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கால்நடைகளை கட்டி பராமரிக்க கூடாது என வலியுறுத்தினார். ஆய்வின்போது பொறுப்புக் குழு உறுப்பினர் சசிகுமார், ஏலகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரகு உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com