எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்

எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். மார்ச் 1ம் தேதி முதல் நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயர்வுடன் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கப்படும். #MLASalaryHike | #BanwarilalPurohit
எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்
Published on

சென்னை

பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

எம்.எல்.ஏ.க்களின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது. தற்போது எம்.எல்.ஏக்களுக்கான ஊதிய உயர்வு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். மார்ச் 1ம் தேதி முதல் நிலுவைத் தொகை மற்றும் ஊதிய உயர்வுடன் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

முன்னதாக எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வுக்கு எதிர்கட்சிகள், மற்றும் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com