தோரணமலை முருகன் கோவிலில் காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு


தோரணமலை முருகன் கோவிலில் காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு
x
தினத்தந்தி 8 Sept 2025 6:12 PM IST (Updated: 8 Sept 2025 9:55 PM IST)
t-max-icont-min-icon

இந்த மாதிரி தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் கடையம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சித்தர்கள் வழிபாடு செய்த புகழ்பெற்ற தோரணமலை ஸ்ரீ முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருவதோடு கோவில் நிர்வாகம் சார்பில் கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் வேலை வாய்பில் உயர்வு பெறுவதற்கான பல்வேறு பயிற்சி வகுப்புகளையும் மற்றும் பல்வேறு கிராமப் பாராம்பரிய விளையாட்டு கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

அதன்படி தோரணமலை கோவில் நிர்வாகம் மற்றும் தென்காசி ஆகாஷ் அகடாமி இணைந்து காவலர் தினத்தை கொண்டாடும் வகையில் தோரணமலை கோவிலில் போட்டி பயிற்சி தேர்வு நேற்று (7-ந் தேதி) நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறைச்சாலை காவலர்களுக்கான போட்டி தேர்வுகள் வருகிற நவம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் காவலர் தினத்தை போற்றி கொண்டாடும் வகையில் காவலர் தேர்வுக்கு படித்து வரும் கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டி தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு நடத்துவதற்கு தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஏற்பாடு செய்திருந்தார்.

காவலர் தினத்தை போற்றும் வகையில் தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் நிர்வாகம் மற்றும் ஆகாஷ் அகாடமி இணைந்து கோவில் வளாகத்தில் வைத்து இந்த மாதிரி தேர்வை நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று தேர்வை எழுதினர்கள்.

மாணவ, மாணவிகளுக்கான மாதிரி தேர்வு வினாத்தாளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் வழங்கி தேர்வை துவக்கி வைத்தார். கிராமப்புற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மேம்பட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பேராசிரியர்கள் அனைவரும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த தன்னார்வத்தோடு முன்வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

1 More update

Next Story