கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

குற்றங்களை தடுக்க கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்
Published on

கட்டுப்பாட்டு அறை திறப்பு

கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு உதவிடும் வகையில் கரூர் மாநகரம் மற்றும் மாவட்ட முழுவதும் இயங்கி வரும் சோதனைச் சாவடிகள், முக்கிய ஊர்கள் மற்றும் முக்கிய சாலைகளின் சந்திப்புகள் ஆகிய இடங்களில் வாகனங்களின் பதிவு எண் மற்றும் விவரங்களை தெரிவிக்க கூடிய 34 அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், கரூர் நகரப் பகுதிகளில் 64 கண்காணிப்பு கேமராக்கள், சோதனைச் சாவடிகளில் 40 காண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 138 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை கரூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் தாடங்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையை நேற்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வந்து திறந்து வைத்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

உடனடி நடவடிக்கை

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறுகையில், கரூர் மாவட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்களை முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. இதில், விதிமீறல் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், வாகன விபத்துக்கள் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் இந்த கேமராக்கள் அதிகம் உதவும், என்றார்.

அப்போது, திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டிஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com