

சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 3 முன்னணி அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆய்வகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான உபகரணங்களுடன் ஆயவகம் அமைக்கப் பட உள்ளது. இதற்காக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
இந்த ஆய்வகம் அமைவதன் மூலம் அரச பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஏ-ஐ. ரோபாடிக்ஸ் துறையில் உலக தரத்திலான பயிற்சியை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.