நாட்டை பாதுகாக்க மோடியால்தான் முடியும்: தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

எதிரிகளை தூள் தூளாக்கும் தைரியம் மோடியிடம் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
நாட்டை பாதுகாக்க மோடியால்தான் முடியும்: தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு
Published on

கள்ளக்குறிச்சி,

பாராளுமன்ற தேர்தலுக்கான, தேர்தல் பிரசாரத்தை முதல் அமைச்சர் பழனிசாமி இன்று துவங்கினார். தேர்தல் பிரசாரத்திற்கு முன், சேலம் கருமந்துறையில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் தனது பிரசாரத்தை துவங்கிய முதல் அமைச்சர் பழனிசாமி, கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே சுதீஷுக்கு ஆதரவாக திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தின் போது முதல் அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். பாகிஸ்தானில் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்பாக மீட்ட பெருமை பிரதமர் மோடியை சாரும். எதிரிகளை தூள் துளாக்கும் தைரியம் மோடியிடம் உள்ளது. நாட்டை பாதுகாக்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

தி.மு.க. ஆட்சியையும் அ.தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். எந்த ஆட்சியில் அதிக நன்மை கிடைத்தது என்று பாருங்கள். மலைவாழ் மக்களுக்கு மின்சாரம் ஏற்படுத்தி கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான்.

குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அ.தி.மு.க. அரசு செய்து தந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள்? எங்கேயாவது நிலம் இருந்தால் அதை பட்டா போட்டுக் கொண்டார்கள் இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com