காவிரி ஆற்றில் குளிக்க தடை: அசலதீபேஸ்வரர் கோவில் தடுப்பு பகுதியில் நின்று வழிபட்ட பக்தர்கள்

மோகனூர் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் அசலதீபேஸ்வரர் கோவிலில் போலீசார் தடுப்பு பகுதியில் நின்று வழிபட்டு சென்றனர்.
காவிரி ஆற்றில் குளிக்க தடை: அசலதீபேஸ்வரர் கோவில் தடுப்பு பகுதியில் நின்று வழிபட்ட பக்தர்கள்
Published on

மோகனூர்:

மோகனூர் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் அசலதீபேஸ்வரர் கோவிலில் போலீசார் தடுப்பு பகுதியில் நின்று வழிபட்டு சென்றனர்.

குளிக்க தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பதிதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி, திருமணிமுத்தாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் மோகனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தடுப்பு அமைத்து பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று ஆடி மாத ஞாயிறையொட்டி காவிரி ஆற்றுக்கு வந்த பக்தர்கள், ஏமாற்றத்துடன் மோகனூர் அசலதீபஸ்வரர் கோவில் அருகே உள்ள போலீசார் தடுப்பு அமைத்த பகுதியில் நின்று வழிபட்டு சென்றனர்.

குலதெய்வ கோவில்

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டால் சாமி கும்பிடுவது தடைபட்டது.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு குலதெய்வ கோவிலில் சாமி கும்பிடலாம் என நினைத்தோம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வந்ததால் இந்தாண்டும் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. எனினும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி தடுப்பில் நின்று சாமி கும்பிட்டு செல்கிறோம்என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com