மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா
மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறப்பு விழா
Published on

மோகனூர்:

மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று காலை புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி, தலைமை தாங்கினார். மோகனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன், முன்னிலை வகித்தார். விழாவில் நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஆர்.ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் உடையவர், மோகனூர் ஒன்றிய செயலாளரும், அட்மா சேர்மனுமான நவலடி, பேரூர் செயலாளர் செல்லவேல், பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார், துணை தலைவர் சரவணக்குமார், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் சுகுமார், இலக்கிய அணி புரவலர் அர்ச்சுனன் உள்பட பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com