பிரதோஷத்தையொட்டிமோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பிரதோஷத்தையொட்டிமோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Published on

மோகனூர்:

மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதயை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com