சேலத்தில்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடிபெண் உள்பட 2 பேர் கைது

சேலத்தில்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடிபெண் உள்பட 2 பேர் கைது
Published on

சேலம்

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 41). வட அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (37). இவர்கள் வங்கிகள் போன்றவற்றில் கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட பலரிடம் ரூ.20 ஆயிரம் வரை முன்பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கடன் ஏதும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர்.

இந்த மோசடி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கடேஷ் உள்பட சிலர் ஏராளமானவர்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வெங்கடேஷ், சாவித்திரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com