பகுதிநேர வேலை தேடுபவர்களை குறிவைத்து பணமோசடி - இருவர் கைது

சென்னையில் பகுதிநேர வேலை தேடுபவர்களை குறிவைத்து பணமோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பகுதிநேர வேலை தேடுபவர்களை குறிவைத்து பணமோசடி - இருவர் கைது
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்த ஒருவர், பகுதி நேர வேலை தொடர்பான விவகாரத்தில், ஒரு கும்பலிடம் 12 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிகொடுத்ததாக, காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் முகமது இலியாஸ், தமிழ்செல்வம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் உள்ள பெண்கள், வேலையில்லாமல் இருப்போரை குறிவைத்து, பகுதி நேர வேலை தொடர்பாக பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், லேப்டாப் மற்றும் நிறுவன சீல் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் மோசடிக்காக உபயோகப்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த 12 லட்ச ரூபாயும் முடக்கப்பட்டது.

ஆன்லைனில் பகுதி நேர வேலை மோசடி தொடர்பான புகார்களை, சைபர் கிரைம் இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com