பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி நாங்கள் வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர்: தேஜஸ்வி யாதவ் புகார்

பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி நாங்கள் வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர் என்று தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்துள்ளார்.
பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி நாங்கள் வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர்: தேஜஸ்வி யாதவ் புகார்
Published on

பாட்னா,

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தள கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 125 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி, 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜ, 74 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதனைத்தொடர்ந்து நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி நாங்கள் வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி ஆர்.ஜே.டி. வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர்.

பீகார் தேர்தலில் மகா கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதிகாரத்தில் நிதிஷ்குமார் இருந்தாலும் மக்கள் இதயங்களில் நாங்கள் தான் இருக்கிறோம். 2015ம் ஆண்டு மகா கூட்டணி உருவான போது, மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தது. மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தாலும் அதிகாரத்தை பெறுவதற்காக பாஜக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தது.

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும். மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 20 இடங்களை இழந்துள்ளோம். இறுதியாக எண்ணப்பட்ட அஞ்சல் வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com