மதுபோதையில் வாலிபர் சிதறவிட்ட ரூ.3 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி

மதுபோதையில் வாலிபர் சிதறவிட்ட ரூ.3 லட்சத்தை மூதாட்டி போலீசில் ஒப்படைத்தார்.
மதுபோதையில் வாலிபர் சிதறவிட்ட ரூ.3 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி
Published on

திருப்பத்தூர், 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்த சம்பளம் ரூ. 3 லட்சத்தை தேனியில் சந்திரன் என்பவரிடமிருந்து வாங்கி கொண்டு மதுரை வந்துள்ளார். அங்கிருந்து அவர் தஞ்சாவூர் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ராஜா மதுபோதையில் இருந்ததாக கூறி கண்டக்டர் அவரை திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார். பின்னர் ராஜா அங்கேயே பணம் இருந்த பையை தலையில் வைத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது பையில் இருந்த பணம் வெளியே சிதறியதை கண்ட அருகில் கொய்யப்பழம் விற்கும் மூதாட்டி கவிதா என்பவர் அந்த பையை எடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி ராஜாவின் குடும்பத்தினரை வரவழைத்து பணத்தை ஒப்படத்துள்ளனர். பணத்தை பொறுப்பாக போலீஸ் நிலையத்தில் கொடுத்த மூதாட்டியை நகர் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com