மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் அண்ணாநகர், தாளமுத்துநகர் பகுதிகளில் மளிகை கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு
Published on

தூத்துக்குடி, அண்ணாநகர் 6வது தெருவைச் சேர்ந்த ஆதித்யா மகன் முருகேசன் (வயது 60). இவர் அண்ணாநகர் 7வது தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23ம்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு 24ம்தேதி காலை திறக்க சென்றுள்ளார். அப்பேது அவரது கடையின் ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபேது கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருடு பேயிருந்தது. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபேல் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தாளமுத்துநகர் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த திருட்டு சம்பவங்கள் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com