குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.
குரங்குகள் தொல்லை
Published on

வத்தலகுண்டு காந்திநகர் மெயின் ரோட்டில் கடந்த சில வாரங்களாக ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை திடீர், திடீரென சாலையின் குறுக்காக ஓடுவதால் சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்லும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் குரங்குகள் மீது மோதாமல் இருக்க வாகனங்களை அவர்கள் நிறுத்த முயலும் போது விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதுதவிர அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குள் புகும் குரங்குகள் நோயாளிகள் வாங்கி வைக்கும் உணவு பொட்டலங்களையும் தூக்கிச்சென்றுவிடுகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com