குரங்குகள் தொல்லை

குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
குரங்குகள் தொல்லை
Published on

அரியலூர் மாவட்டம், ஆ.சோழங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றிதிரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்து உணவு மற்றும் தின்பண்டங்களை தூக்கி சென்று வருகிறது. மேலும் வீடுகளின் மேற்கூரைகளை பிரித்து நாசமாக்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com