மாதவரம், விருகம்பாக்கம் கால்வாய்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு

கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாதவரம், விருகம்பாக்கம் கால்வாய்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு
மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆய்வு
Published on: 

சென்னை,

மாநகராட்சி ஆணையாளர் சமீரன், மாதவரம் புழல் உபரி நீர் கால்வாய் மற்றும் விருகம்பாக்கம் கால்வாயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இன்று மாநகராட்சி ஆணையாளர் சமீரன், மாதவரம் மண்டலம், மாதவரம் ரெட் ஹில்ஸ் சாலையில் உள்ள புழல் உபரி நீர் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள 200 அடி சாலை முதல் புழல் உபரிநீர் கால்வாய் வரை 1,160 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.22.86 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கோடம்பாக்கம்

இதனை தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com