சதாப்தி, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் படிப்பதற்காக மாதாந்திர இதழ்கள்

ரெயில் பயணத்தின் போது பயணிகள் படிப்பதற்காக ‘ யுவர் பிளாட்பார்ம்’ என்னும் மாதாந்திர இதழ் அறிமுகம் செய்யப்பட்டது.
சதாப்தி, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் படிப்பதற்காக மாதாந்திர இதழ்கள்
Published on

சென்னை:

தெற்குரெயில்வே பயணிகள் பயன்பாட்டிற்காக பல்வேறு வகையான சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் ரெயில் பயணத்தின் போது பயணிகள் படிப்பதற்காக ' யுவர் பிளாட்பார்ம்' என்னும் மாதாந்திர இதழ் இன்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் பி.ஜி.மல்யா கலந்து கொண்டு இதழை வெளியிட்டார். அதன் பின்னர் பெங்களுரூ செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பயணிகளுக்கு இந்த இதழ்களை வழங்கினார்.

சென்னை-மைசூரு ,சென்னை-கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களுரூ இடையே இயக்கப்படும் இரட்டை மாடி ரெயில் மற்றும் சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரெயில்களில் தற்போது இந்த மாதாந்திர இதழ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதை பயணிகள் பயணத்தின் போது படித்துவிட்டு பயணம் முடிவடைந்த பின் இருக்கையிலேயே வைத்து விட்டு செல்லவேண்டும். இதழில் தெற்கு ரெயில்வே தொடர்பான வரலாற்று செய்திகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் இடம்பெற்றுள்ளது.

இதைத்தவிற பயணம், வாழ்வியல், உணவு சம்பந்தப்பட்ட செய்திகளும் உள்ளே இடம்பெற்றுள்ளது. தற்போது ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த இதழ்கள் விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com