

தென்காசி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் அவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது.
தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானைகோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.