மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
Published on

தென்காசி,

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (19.5.2026, செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (19.5.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர். வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) பூபேஸ்ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (19.5.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com