மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர்ப்புற துணைமின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (4.11.2025, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு வடக்கு காட்டன்ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம்,

திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், சி.ஜி.இ. காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியாநகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com