மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

தூத்துக்குடி வாகைக்குளம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஊரகக் கோட்டம்

தூத்துக்குடி ஊரகக் கோட்டச் செயற்பொறியாளர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (15.10.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

அதன்படி சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்பாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், பேருரணி, வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்பபுரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலுரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com