மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையம் மற்றும் கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நாளை மறுநாள் மடத்தூர், மில்லர்புரம், அண்ணாநகர், தட்டப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை

இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி நகர்ப்புற விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சிப்காட் துணை மின் நிலையம் மற்றும் கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை மறுநாள் (19.11.2026, வியாழக்கிழமை) நடைபெற உள்ளன. இதனால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

சிப்காட் துணை மின்நிலைய பகுதிகள்

மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர்காலனி, ராஜீவ்நகர், சின்னமணிநகர், 3-வதுமைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி (EB காலனி), ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு குடியிருப்புகள்,

ராஜகோபால்நகர், பத்திநாதபுரம், சங்கர்காலனி, எஃப்.சி.ஐ. குடோன் (FCI குடோன்) பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்காபரமேஸ்வரிகாலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாளையாபுரம், வி.எம்.எஸ்.நகர், நேதாஜிநகர், லூசியாகாலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன்காலனி,

காமராஜ்நகர், என்.ஜி.ஓ.காலனி (NGO காலனி), அன்னைதெரசா நகர், பர்மாகாலனி, டி.எம்.பி.காலனி (TMB காலனி), அண்ணாநகர் 2-வது தெரு மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின்ரோடு, டிமார்ட், கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கொம்புக்காரநத்தம் துணை மின்நிலைய பகுதிகள்

வடக்கு காரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாக்குறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி மகிழம்புரம், தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூர், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பருப்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், கைலாசபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். எனவே பொதுமக்கள் தங்களது மின்தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்வாரியப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X