மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி வாகைக்குளம், பீச்ரோடு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி வாகைக்குளம் துணை மின் நிலையம் மற்றும் பீச்ரோடு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டம்

தூத்துக்குடி பீச் ரோடு மின் விநியோக பிரிவு உதவி பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி நகர்ப்புற கோட்டம், தூத்துக்குடி வடக்கு உபகோட்டம், பீச் ரோடு விநியோக பிரிவுக்கு உட்பட்ட பீச்ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (15.10.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

இதன் காரணமாக இனிகோநகர், ரோச்‌காலனி சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுண், தெற்கு காட்டன் ரோடு, காசுகடை பஜார், சுனோஸ்காலனி, செயின்ட்பீட்டர்கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலிபோன்காலனி, தாமஸ்நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார்தெரு, பெருமாள்தெரு, சிவந்தாகுளம்ரோடு, சண்முகபுரம் பிராப்பர் சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2வது தெரு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியாநகர், ராஜபாண்டிநகர், பெரியசாமிநகர், எம்.ஜி.ஆர். நகர் முடுக்கு காடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஊரகக் கோட்டம்

தூத்துக்குடி ஊரகக் கோட்டச் செயற்பொறியாளர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஊரகக் கோட்டத்திற்குட்பட்ட வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (15.10.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

அதன்படி சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்பாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், பேருரணி, வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்பபுரம், எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலுரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com