

திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட திசையன்விளை, வள்ளியூர், நாங்குநேரி AMRL மற்றும் விஜயாபதி ஆகிய துணைமின் நிலையங்களில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (16.6.2026, செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திசையன்விளை, வள்ளியூர், நாங்குநேரி AMRL மற்றும் விஜயாபதி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (16.6.2026, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழ்குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கரைசுத்து உவரி, கூட்டபணை, கூடுதாளை, குட்டம், விமணங்குடி.
வள்ளியூர், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி.
நாங்குநேரி, இராஜக்கள் மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம்.
கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.