

திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கனான்குளம், பரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சங்கனான்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (29.6.2026, திங்கள்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பரப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (29.6.2026, திங்கள்கிழமை) மின்வாரிய மாதந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி பரப்பாடி, இலங்குளம், சடையனேரி , சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்ப்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம் சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.