

திருநெல்வேலி,
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (4.7.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (4.7.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன்நகர், சாஸ்திரிநகர், தீன்நகர், திருமங்கைநகர், செந்தமிழ்நகர், பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P.மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி.தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்குதெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (4.7.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை.
அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி.
மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி.
கடையம், கட்டேரிபட்டி,முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம்,இரவண
சமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பணகுடி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (4.7.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.