மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி கோட்டம்

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கல்லிடைக்குறிச்சி கோட்டம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (6.10.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

இதன் காரணமாக காரையார், சேர்வலார், பாபநாசம், டாணா, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியார்பட்டி, தாட்டான்பட்டி, கொண்டபையன்பட்டி, வடமலைசமுத்திரம், பசுக்கிடைவிளை, சங்கரபாண்டியபுரம், கருத்தையாபுரம், அய்யனார்குளம்.

ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P.நாடானூர், துப்பாகுடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வள்ளியூர் கோட்டம்

வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கூடங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (6.10.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com