

திருநெல்வேலி,
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் உள்ள தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (8.6.2026, திங்கள்கிழமை) மின்வாரிய மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் பின்வருமாறு மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (8.6.2026, திங்கள்கிழமை) மின்வாரிய மாதந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக அன்றை தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.